சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினரால் கந்தரோடையில் வாழ்வாதார உதவி!

சுன்னாகம் லயன்ஸ் கழகத் தலைவர் லயன் செல்வராகினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, அமரத்துவமடைந்த லயன் மகாதேவாவின் கந்தரோடை இல்லத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் 30 இற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர்.

இந்த நிகழ்வில் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் கழகச் செயலாளருமாகிய லயன் சி.ஹரிகரன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செ.விஜயராஜ், சுன்னாகம் லயன்ஸ் கழக உறுப்பினர்களான லயன் வசிகரன், லயன் க.தினேஸ் ஆகியோர் பங்குகொண்டனர்.

நாட்டில் பொருள்களின் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில், சாதாரண தர குடும்பங்கள் வாழ்க்கைச் சுமையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான வாழ்வாதார உதவி அவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் வகையில் லண்டனில் வாழும் லயன் ம.பிரிதுவிராஜா தனது பிறந்ததினத்தில் இந்தத் திட்டத்துக்கு அனுசரணை வழங்கியுள்ளார்.

Recommended For You

About the Author: admin