யாழ்.பருத்தித்துறையில் சைக்கிள் திருடன் கைது! 10 சைக்கிள்களை மீட்டுள்ள பொலிஸார்.. |

யாழ்.பருத்தித்துறை பகுதியில் பாடசாலை மாணவர்களின் சைக்கிள்களை திருடிவந்த ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், குறித்த நபரிடமிருந்து சுமார் 10 சைக்கிள்களை மீட்டிருக்கின்றனர்.

பருத்தித்துறை சுப்பர்மடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு அண்மையில்  கைது செய்யப்பட்டார். விசாரணைகளில் 20 துவிச்சக்கர வண்டிகளைத் திருடி விற்பனை செய்துள்ளதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவற்றில் 10 துவிச்சக்கர வண்டிகளே கைப்பற்றப்பட்டுள்ளன. ஏனையவை தேடப்பட்டு வருகின்றன.” என்றும் பொலிஸார் கூறினர்.

Recommended For You

About the Author: admin