இலங்கையில் கிளர்ச்சிக்கு தயாராகும் பொதுமக்கள்! பகிரங்க எச்சரிக்கை.!

இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சி ஒன்றுக்கு தயாராகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையை தாங்க முடியாத நிலையில் பொதுமக்கள் கிளர்ச்சிக்கு தயாராவதாக முன்னாள் ஜனாதிபதி பதுளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.

ஒரே இரவில் மேற்கொள்ளப்பட்ட பொருட்களின் விலையுயர்வு காரணமாக நாடு மேலும் மேலும் துயரங்களுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டின் பொருளாதார சுமையை ஆட்சேபித்து அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 15ஆம் திகதி போராட்டம் ஒன்றில் இணையுமாறு எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin