பிரித்தானிய நாடாளுமன்றில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி! – கைத்தட்டி அமோக வரவேற்பு…!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றில் வரலாற்று சிறப்புமிக்க உரையை ஆற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “எங்கள் நிலத்துக்காக என்ன விலை கொடுத்தாலும் தொடர்ந்து போராடுவோம். காடுகளிலும், வயல்களிலும், கரைகளிலும், தெருக்களிலும் போராடுவோம். நமக்கானதை நாங்கள் இழக்க விரும்பவில்லை, நாங்கள் தொடங்காத, நாங்கள் விரும்பாத போரை உக்ரைன் நடத்தி வருகிறது. உக்ரேனியர்கள் தங்கள் நாட்டைக் காப்பாற்றப் போராடுகிறார்கள். நாஜிக்கள் உங்கள் நாட்டிற்கு எதிராகப் போராடத் தொடங்கியபோது நீங்கள் உங்கள் நாட்டை இழக்க விரும்பவில்லை, நீங்கள் பிரிட்டனுக்காகப் போராட வேண்டியிருந்தது.இந்த யுத்தத்தில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், இவர்கள் வாழக்கூடிய குழந்தைகள், ஆனால் அவர்களை எங்களிடமிருந்து பறித்துவிட்டனர்” என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், “பிரித்தானியா எங்கள் நட்பு நாடுகளும் எங்கள் உக்ரேனிய நண்பர்களுக்கு அவர்களின் தாயகத்தைப் பாதுகாக்கத் தேவையான ஆயுதங்களை வழங்குவதில் அழுத்தம் கொடுப்பதில் உறுதியாக உள்ளனர்” என தெரிவித்தார். ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத்  கடுமையாக்க பிரித்தானியா அழுத்தம் கொடுக்கும் என்றும் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்துவோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேரழிவு முயற்சியில் விளாடிமிர் புடின் தோல்வியடைந்து, உக்ரைன் மீண்டும் சுதந்திரம் பெறும் வரை, இராஜதந்திர, மனிதாபிமான மற்றும் பொருளாதாரம் என்று எங்களால் முடிந்த ஒவ்வொரு முறையையும் யன்படுத்துவோம்.” அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, உக்ரைன் ஜனாதிபதியின் உரைக்கு முன்னரும், பின்னரும் சபையில் கூடியிருந்தவர்கள் கைத்தட்டி வரவேற்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin