ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டை சுற்றிவளைத்த சம்பவத்துக்கு ஐக்கிய மகளிர் சக்தி கண்டனம்…!

ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிமேரச்சந்திரவின் வீட்டை சுற்றிவளைத்து அவரை கடும்தொனியில் எச்சரித்த சம்பவத்துக்கு, ஐக்கிய மகளிர் சக்தி கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிமேரச்சந்திரவை கடும்தொனியில் எச்சரித்த சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக, ஐக்கிய மகளிர் சக்தியின் செயலாளர் நிரூபா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டுக்கு முன்பாக, நேற்று முன்தினம் இரவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவருக்கு எதிரான கருத்துக்களையும் வெளியிட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே ஐக்கிய மகளிர் சக்தியின் செயலாளர் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

மொட்டுக்கட்சிக்கு சார்பான வன்முறையில் ஈடுபடும் ஒரு குழுவினரின் நடத்தை, சமூக ஒழுங்கில் இருந்து வேறுபட்டு விதமாக அமைந்திருந்தமையால் குறித்த நடத்தையை நாங்கள் வெறுப்புடன் கண்டிக்கின்றோம்.

ஹிருணிகா பிமேரச்சந்திர தலைமையிலான ஐக்கிய மகளிர் சக்தியின் பெண்கள் குழு, நேற்று முன்தினம் பிற்பகல் ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்னால் சென்று ஒரு ஜனநாயக ரீதியான போராட்டம் மூலம் கடிதம் ஒன்றை கொடுத்தமைக்கு, வெறிப்பிடித்த வன்முறைக் குழுவின் மூலம் எமக்கு மேற்கொள்ளப்பட்ட பதிலாடியாகவே இதை நாங்கள் கருதுகின்றோம்.

மொட்டுக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் மேற்கொண்ட இத்தகைய நடத்தையானது, இந்நாட்டில் உள்ள ஐம்பத்திரண்டு சதவீத பெண்கள் தொடர்பான தங்கள் மதிப்பீட்டை பிரதிபலிப்பதாகவே உள்ளது.

ஒரு ஜனநாயக எதிர்ப்பு மற்றும் ஒரு ஜனநாயக ரீதியான கோரிக்கைக்கு, அரசாங்கத்தின் பல வன்முறை மற்றும் மிரட்டல் என்றால், அத்தகைய நாட்டில் எதிர்காலத்தின் பயங்கரமான பிரதிபலிப்பு எவ்வாறு அமையும் என்பதுபற்றி ஒருவரால் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கும்.

மொட்டுக்கட்சியை பிரதிநித்துபவப்படுத்தும் கும்பலின் நடத்தையை யாராவது அங்கிகரிப்பதாக இருந்தால், நாகரீத்தைவிட பழங்குடி சமூகத்தின் நடத்தைக்கு இது நெருக்கமானது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin