ரஷ்யாவுடனான போரைத் தவிர்க்க விரும்புகிறோம்” – பிரிட்டன் பாதுகாப்புத் தலைவர் –

போர் தீவிரமடையாமல் இருக்க யுக்ரேன், ஐரோப்பா மற்றும் உலக மக்களுக்கு பிரிட்டன் கடன்பட்டுள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்புத் தலைவர் அட்மிரல் சர் டோனி ராடாகின் தெரிவித்தார்.

யுக்ரேன் மக்கள் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதை ஏற்றுக்கொண்டவர், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரை பிரிட்டன் விரும்பவில்லை என்றும் கூறினார்.
மேற்கத்திய பாதுகாப்புக் கூட்டமைப்பான நேட்டோவில் அங்கம் வகிக்கும் பிரிட்டன், யுக்ரேனிய வான்பரப்பில் ரஷ்யா பறப்பதற்குத் தடை விதிக்க மறுப்பதாக அந்த நாட்டின் அதிபர் வொலோதிமிர் ஸ்லென்ஸ்கி தனது கோவத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது ரஷ்ய படைகளுடன் நேரடியாகச் சண்டையில் இறங்கும் வகையிலான கூட்டணிக்கு வழிவகுக்கும்
ஆனால், படையெடுப்பு ரஷ்யாவிற்கு நேர்மறையானதாக இல்லை என்றும் பிரிட்டனின் எதிர்வினை சரியானது என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் சர் டோனி கூறினார்.

Recommended For You

About the Author: admin