ரஷ்ய – உக்ரைன் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ள உலகின் மிக பெரிய விமானம்! வெளியான புகைப்படங்கள்….!

ரஷ்ய – உக்ரைன் தாக்குதலில் உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், ரஷ்ய படைகளால் தகர்க்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 என்ற விமானம், உக்ரைனில் தயாரிக்கப்பட்டது. உக்ரைன் ஹொஸ்டமெல் விமான நிலையத்திலேயே இந்த விமானம் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் ’அண்டனோவ் 225 மிரியா’ கடந்த 28 ஆம் திகதி ரஷ்ய படைகளின் தாக்குதலில் தகர்க்கப்பட்டது.

6 எஞ்சின்கள், 314 டன் எடைகொண்ட இந்த சரக்கு விமானம் கோவிட் பரவல் காலத்தில் உலகம் முழுவதும் மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல பெருதவி செய்ததுடன்,  சரக்கு விமானம் ரஷ்ய தாக்குதலில் தற்போது பெருமளவு தகர்க்கப்பட்டுள்ளது.

விமானத்தை சீரமைக்க 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவுக்கு செலவு ஏற்படலாம் என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin