யாழில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் பலி…..!

யாழ்ப்பாணம் – கோவில் வீதி பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கடுகதி புகையிரதத்தில் பாய்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.

அரியாலையைச் சேர்ந்த பரமேஸ்வரன் இலக்சன் (வயது 25) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலமானது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin