பாலத்தின் அபிவிருத்திக்கான ஒப்பந்தக்காலம் முடிந்தும் நிறைவடையாமையால் மக்கள் அதிர்ப்தி…….!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு அருகில், A35 பிரதானவிதியிலுள்ள பாலம் கடந்த  ஆண்டு 11.05.2020ம் திகதியில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இப்பாலத்தின்  வேலைகள் மந்தகெதியிலே நடைபெறுவதனால் மக்கள் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.
07.11.2021ம் திகதியுடன் இப்பாலத்தின் அபிவிருத்தி பணிகள்  நிறைவடையும்  என  குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இன்றுவரை பாலத்தின் அபிவிருத்தி பணிகள்  நிறைவடையவில்லை.
இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது  தொடர்பாக சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாலத்தினை விரைவாக  பூரத்தி செய்து மக்கள் பாவனைக்கு வழங்கவேண்டும் என பலரும் கோருகின்றனர்.

Recommended For You

About the Author: admin