வீட்டுக்குள் நுழைந்து வயோதிப பெண்ணின் காதை அறுத்து, அடித்து பல்லை உடைத்த கொள்ளையன்!

வயோதிப பெண் ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்து திருடன் குறித்த வயோதிப பெண்ணின் காதை அறுத்துள்ளதுடன், அடித்து காயப்படுத்திய நிலையில் வயோதிப பெண் கூச்சலிட்டதால் தப்பி ஓடிய சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 70 வயதான வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த திருடன் பெண்ணின் காதினை அறுத்ததுடன், உன்னிடம் உள்ள மாலையை தா என்று கழுத்தினை நெரித்துள்ளான். 

இந்நிலையில் வயோதிப பெண் கூச்சலிட்ட நிலையில் பெண்ணின் வாயை தாக்கி பற்களை உடைத்துள்ளான். இந்நிலையில் சத்தம் கேட்டு குறித்த வயோதிப பெண்ணின் பெறாமகன் விழித்துக் கொண்ட நிலையில் திருடன் தப்பி ஓடியுள்ளான்.

குறித்த சம்பவம் தொடர்பாக திருடனின் அடையாளங்களை உறவினர்கள் தெரிவித்தமைக்கு அமைவாக இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமுற்ற வயோதிப பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், குறித்த தாயிடம் இருந்த திருடப்பட்ட நகைகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews