ரஸ்யாவுக்கு எதிராக சர்வதேச முக்கிய முடக்கல் அமுல். அமெரிக்க சார்பு நாடுகள் அறிவிப்பு! –

ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், உக்ரெய்ன் மீது ரஸ்ய படையெடுப்பைக் கண்டித்து ஒரு ஒருங்கிணைந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

ரஸ்ய படைகள் கெய்வ் மற்றும் ஏனைய உக்ரேனிய நகரங்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட நிலையில், ரஸ்யாவை சர்வதேச நிதி அமைப்பு மற்றும் பொருளாதாரங்களில் இருந்து மேலும் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ள உறுதியாக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் எதிர்வரும் நாட்களில் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளில் “தேர்ந்தெடுக்கப்பட்ட ரஸ்ய வங்கிகளை ஸ்விஃப்ட்; (SWIFT)அமைப்பிலிருந்து அகற்றுவதும் அடங்கவுள்ளதாக குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து இந்த வங்கிகள் சர்வதேச நிதி அமைப்பில் இருந்து துண்டிக்கப்படுவதையும், உலகளவில் செயல்படும் அவற்றின் திறன் கட்டுப்படுத்தப்படுவதையும் இது உறுதி செய்யும்.

ஸ்விஃப்ட் என்பது உலகளாவிய நிதி “நாடி” முறையாகும், இது எல்லைகளைத் தாண்டி பணத்தை இலகுவாகவும் விரைவாகவும் மாற்ற அனுமதிக்கும் முறையாகும்.

உக்ரெய்ன் மீது ரஸ்யா தாக்குதல்களை ஆரம்பித்ததன் பின்னர், ரஸ்யாவுக்கு எதிராக இந்த ஸ்விஃப்ட்; முடக்கத்தை உக்ரேய்ன் கோரியிருந்தது.

எனினும் இதனால் தமது நாடுகளும் பாதிக்கப்படு;ம் என்ற அடிப்படையில் முக்கிய நாடுகளின் மத்தியில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வந்தன.

இறுதியாக தற்போது நாடுகள் அனைத்தும் பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளன

Recommended For You

About the Author: Editor Elukainews