நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இது தான் கடைசி முறையாக இருக்கும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உருக்கம்……!

நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இது தான் கடைசி முறையாக இருக்கும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகின்றன. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி காட்சி மூலம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இது தான் கடைசி முறையாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews