அளம்பிலில் யாழ்ப்பாண இளைஞர்கள் 12 பேர் கைது!

யாழ்பாணத்தில் இருந்து அளம்பில் சென்றவர்களுக்கும் அளம்பில் பிரதேசத்தினை சேர்ந்தவர்களுக்கும் நேற்று 20 மாலை இடம்பெற்ற முரண்பாட்டை தொடர்ந்து அது கைகலப்பாக மாறியுள்ளது. தாக்குதலின் போது யாழில் இருந்து சென்ற இருவரும்,  அளம்பில் பகுதியினை சேர்ந்த 18, 37, 45 அகவைக்கு உட்பட்ட மூவரும் என 5 பேர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து யாழில் இருந்து மினி பஸ்ஸில் சென்ற 12 பேர், அளம்பில் பகுதியினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 13 பேர் முல்லைத்தீவு பொலீசாரால் துசெய்யப்பட்டுள்ளார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews