பளை நகரில் முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவரின் பெயரில் இயங்கிய கடை உரிமையாளர் ஐஸ் போதையுடன் கைது….!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகரப்பகுதியில் முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் செயலாளர் நாயகத்தின் பெயரால் இயங்கிவந்த கடை ஒன்றின் உரிமையாளர் 110 மில்லிக்கிராம் ஐஸ் போதையுடன் இன்று பளை போலீசாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே  குறித்த நபர் பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே வேளை  பளை போலீஸ் பிரிவின்  முகமாலை பகுதியிலும் கடந்த சில தினங்களுக்கு முன் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரையும் நாளைய தினம் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews