வடமராட்சி மீனவரகளால் முன்னெடுக்கப்பட்ட மீனவர் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.

எல்லை தாண்டிய இந்திய  மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதற்க்காக எழுத்துமூலமாக பொறுப்பு வாய்ந்தவர்கள் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று கோரிய போராட்டம் இன்று சுப்பர்மடம் மீனவர்களால் ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்க படுகிறது. இதில் தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்தரன் கலந்து கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் பருத்தித்துறை போலீசார் பருத்தித்துறை நீதி மன்றில் தடை உத்தரவை பெற்று வீதி போக்குவரத்தை தடைகளை அகத்தியர். இந்நிலையில் சுப்பர்மடம் பகுதியில் பல கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் இணைந்து சாலை ஓரமாக தரப்பாளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இலங்கையின் சுதந்திரதினமான இன்று பலரும் கறுப்பு கொடிகளை வீதி எங்கும் பறக்க விட்டிருப்பதுடன் பலர் கறுப்பு நிற ஆடைகளையும், அணிந்துள்ளனர். பலர் தமது உந்துருளிகளில் கறுப்பு கொடியை கட்டிக்கொண்டு செல்வதையும் அவதானிக்க முடிகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews