35 தொடக்கம் 40 மணித்தியாலங்களில் இலங்கையை மோட்டார் சைக்கிளில் சுற்றிவரும் சாகச பயணம்! இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்.. |

யாழ்ப்பாணத்திலிருந்து கரையோர பாதை ஊடாக இலங்கை சுற்றி சுமார் 1380 கிலோ மீற்றர் துாரத்தை 35 தொடக்கம் 40 மணித்தியாலங்களில் மோட்டார் சைக்கிளில் கடக்கும் பயணம் இன்று காலை 5 மணிக்கு யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விஷேட ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று வியாழக்கிழமை(3) காலை 5 மணிக்கு யாழ்.மாவட்டத்தில் உள்ள துரையப்பா விளையாட்டு அரங்கில் இருந்து மோட்டார் சைக்கிள் இப்பயணம் ஆரம்பிக்கவுள்ளது. இது இலங்கையின் கரையோரப் பாதைகள் ஊடாக இலங்கைத் தீவின் அண்ணளவாக 1380 kmதுரத்தை 35 தொடக்கம் 40 மணித்தியாலங்களுக்குள் பயணம் செய்து மீண்டும் யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை(4) வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காரணமாக பாதிக்கப்பபட்டு படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கும் இலங்கை மக்களை மேலும் ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையின் 74வது சுதந்திரதினத்திற்கான வாழ்த்தினை கூறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews