43 இந்திய மீனவர்களுக்கு கொரோனா தொற்று..!

யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 43 இந்திய மீனவர்கள் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டபோதும் கொரோனா தொற்றினால் மீளவும் நாடு திரும்ப முடியாமல் உள்ளனர்.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்19 மற்றும் 21ஆம் தேதிகளில் 8 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 56 மீனவர்களும் கடந்த 25 ஆம் தேதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விமானம் மூலம் அனுப்பிவைக்க சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு விமானப்பயணம் மேற்கொள்வதற்காக அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்தபோது

43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனால் கொரோனா காலத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவுபெற்ற பின்பே தமிழ்நாட்டிற்கு பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews