நாட்டில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா..! ஆயிரத்தை எட்டும் தினசரி தொற்றாளர் எண்ணிக்கை.. |

இலங்கையில் மீண்டும் கொரோனா அபாயம் உச்சம் தொடுகின்றது. நேற்றய தினம் சுமார் 982 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 609,047 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும்  (27) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,400 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,

கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 577,314 ஆக அதிகரித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews