கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபருக்கு விளக்கமறியல்…..!

கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபரை எதிர்வரும் திங்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை சுகாதார  வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கியிருந்த நிலையில் போலீசாரால்   இன்று கைது செய்யப்பட்டு மன்றில் முற்படுத்தியபோதே இவ்வாறு தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அந்தக்  நபர் கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதுடன் அவரது விடுதிக்கும்  வாகனத்தில் சென்று அச்சுறுத்தியமை  தொடர்பிலும்  தரும்புரம்  போலீஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததுடன்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  தருமபுரம் போலீசாரால் மேற்கொண்டு  வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews