கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் விவசாயச் செய்கை முன்னெடுப்பு –

மட்டக்களப்பு கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய தோட்டத்தில் விவசாய போதனாசிரியரின் ஆலோசனை வழிகாட்டலுக்கு அமைவாக பயிர்கள் நடும் திகழ்வு நேற்று இடம் பெற்றுள்ளது.

வங்கி முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விவசாய போதனாசிரியர், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தத்கள், வங்கி கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.

விவசாயத் திணைக்களத்தின் ஆலோசனை வழிகாட்டலுக்கு அமைவாக வங்கித் தோட்டத்தில் தயாரிக்கப்பட்ட சேதனப்பசளையினை பயன்படுத்தி இதன்போது கத்தரி, மிளகாய், தக்காளி போன்ற பயிர் கன்றுகள் நடப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews