இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம்: மு.க.ஸ்டாலின்.

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு, இந்தியா – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கவுள்ளாதாக அறிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழகத்தைச் சார்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் பொருட்டு, 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வீதமும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ஒன்றரை இலட்சம் வீதமும், மொத்தம் ரூபா 5.66 கோடி வழங்கப்படவுள்ளது.
வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடாக ரூபா 5.66 கோடி வழங்கப்படவுள்ளது.
இதேவேளை இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியிருந்த நிலையில், அது தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, துரித நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin