யாழ்.மாதகலை சேர்ந்த சிற்றுார்தி சேவை சாரதி சங்கானையில் சடலமாக மீட்பு!

கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்த உள்ளூர் சிற்றுார்தி சேவை சாரதி ஒருவர் சங்கானை – மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாதகல் பகுதியை சேர்ந்த கடம்பன் (வயது 38) என்ற குறித்த குடும்பஸ்த்தரே கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்ததாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் குளத்திலிருந்து நேற்று பிற்பகல் அவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews