காஸ் அடுப்பு வெடித்டில் தீப்பற்றி எரிந்த விட்டை புனரமைக்க யாழ் மாநகர முதல்வர் உதவி…….!

மன்னார் மாவட்டத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதில் முற்றுமுழுதாக எரிந்து நாகசமா வீட்டினை புனரமைத்து கொடுப்பதற்கு யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் உதவியளித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

கடந்த 06.01.22 அன்று எரிவாயு அடுப்பு வெடித்ததில் மன்னார் மாவட்டத்தில் தற்காலிக  வீடு ஒன்று  முழுமையாக  எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்  நிலையில் வசிப்பதற்க்கு வீடு இல்லாமல் நிற்கதிக்குள்ளான நிலையிலிருந்த  வீட்டு உரிமையாளர் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி மணிவண்ணனுடன் தொடர்புகொண்டு உதவி கொரியநிலையில் அவர்களால் தற்காலிகமாக வசிப்பதற்க்கு ஏற்ற வகையில்  வீட்டை  கட்டி முடிப்பதற்க்காக  சிமெந்து மற்றும் வீடு கட்டுவதற்க்காக உதவி பொருட்கள் நேற்று 10/01/2022  வழங்கி வைக்கப்பபடுள்ளன.

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், விஸ்ணுகாந் கனசபை,மன்னார் மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் திரு.சகாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews