கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 4 வயது சிறுவன்! யாழ்.ஊர்காவற்றுறையில் சம்பவம்……!

யாழ்.ஊர்காவற்றுறையில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தொியவருகின்றது. 

ஊர்காவற்றுறை – நாரந்தனை வடக்கில் நேற்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவத்தில் விஜயேந்திரன் ஆரணன் (வயது4) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில்,

கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாமல்போயுள்ளான். இதனையடுத்து பெற்றோர் தேடிய நிலையில்,

சிறுவன் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளான். இச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews