மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தினரால் 450 குடும்பங்களுக்கு உதவி.

மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தினரால் நேற்றையதினம் யாழ்ப்பாணம் வடமராட்சி முனை, வல்வெட்டித்துறை, மயிலிட்டி போன்ற பகுதிகளில்  தற்போதைய நிலையில் கடற்றொழிலுக்கு  செல்லமுடியாது பொருளாதாரம் பாதிக்கப்பட்ட 450  மீனவ குடும்பங்களுக்கு தலா 18 கிலோ கொண்ட உலர் உணவு பொதிகள்  பொதிகள் நேற்று 05/01/2022  வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ் உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு
மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகுராடோ (yardsan figurado) தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரபல தொழிலதிபர் வின்சன் டி போல் டக்ளஸ் உட்பட பலர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews