குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம்….!

குற்றவாளிகளை கைது செய்து குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிசாரின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ஏ9 வீதியை மறித்து இடம்பெற்றது.
இன்று காலை 10 மணியளவில் குறித்த இளைஞனின் இறுதி கிரியைகள் இடம்பெற்றதை தொடர்ந்து சடலம் மக்கள் பேரணியுடன் பரந்தன் சந்திவரை சென்றது. தொடர்ந்து குறித்த பகுதியில் ஏ9 வீதியை மறித்து இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பல்வேறுபட்ட வயதை சேர்ந்தவர்கள் இணைந்து வீதி மறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews