யாழ்.காரைநகர் – கசூரினா கடலில் மூழ்கி காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு!

யாழ்.காரைநகர் – கசூரினா கடற்கரைக்கு 20 பேருடன் சுற்றுலா சென்ற இடத்தில் கடலில் குளிக்க சென்று காணாமல்போன 17 வயது மாணவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் கோண்டாவில் – தில்லையம்பதி பகுதியை சேர்ந்த யோகராசா லோகீஸ்வரன் (வயது 17) என்ற யாழ்.இந்து கல்லுாரி மாணவனே உயிரிழந்துள்ளார்.

கோண்டாவிலில் இருந்து 20 பேர் புத்தாண்டு தினத்தில் காரைநகர் – கசூரினா கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதன்போது கடலில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த மாணவன் காணாமல்போயுள்ளார்.

இதனையடுத்து கடற்படையினரின் உதவியுடன் நடத்தப்பட்ட சுமார் 4 மணி நேர தேடுதலின் பின்னர் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews