சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பால் பற்றி எரிந்த வீடு! –

வத்தளை, ஹூனுப்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவலால் வீடு முழுவதும் சேதமடைந்துள்ளதுடன், தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவலால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews