ஐயன்கன் குளம் மகாவித்திற்க்கு பேரூந்து நூலகம் அன்பளிப்பு…….!

(முல்லைத்தீவு)
முல்லைத்தீவு மாவட்டத்தின்  துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஐயன்கன்குளம் மகாவித்தியாலயத்திற்கு தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையினால்  நூலகப் பேருந்து நேற்று பிற்பகல் 3:00 மணியளவில்  கையளிக்கப்பட்டது .
 மேற்படி நூலக பேருந்தின தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையின் உதவிப் பணிப்பாளர் சமிந்த டி சில்வா மற்றும் மிகிர அரவிந்த அவர்களுடன்  மேற்படி சபையின் தகவல் உதவியாளர் சி.எம் ஷபீக்,அவர்களால் இந்த பேருந்து நேற்று  பாடசாலை அதிபர்  திருமதி கீதா பாலசிங்கம் அவர்களிடம்  கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாடசாலை வலய கல்வி பணிமனை அதிகாரிகள்,  அபிவிருத்தி சங்கம், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், கிராம நலன் விரும்பிகள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 இந்த  பேருந்து நூலகத்தின் மூலம் நூலக வசதிகள் அற்ற பாடசாலை ஆகிய ஐயன்கன்குளம் மகாவித்தியாலயம் மேலும் முன்னோக்கி பயணிக்கும் என பாடசாலை, சமூகம் தெரிவிக்கின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews