யாழ்.காரைநகர் பிரதேசசபை தவிசாளர் தொிவு மீண்டும் சுயேட்சை குழு உறுப்பினர் மயிலன் அப்புத்துரை தவிசாளர்!

யாழ்.காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழுவைச் சார்ந்த மயிலன் அப்புத்துரை நேற்று வியாழக்கிழமை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற தவிசாளர் தெருவில் சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர் யோகநாதன் முன்மொழிய. தமிழ்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த விஜயராஜா வழிமொழிந்தார். இதனை அடுத்து வேறு எந்த முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கபடாத நிலையில்  சுயேட்சைகுழுவைச் சேர்ந்த மயிலன் அப்புத்துரை ஏகமனதாக தவிசாளராக தெரிவு செய்யப்படுவதாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அறிவித்தார்.

மேலும் நேற்றைய சபை தவிசாளர் தெரிவில் சுயேட்சைகுழுவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும்,

அகில இலங்கை தமிழரசு கட்சியை  சேர்ந்த ஒரு உறுப்பினரும் கலந்துகொண்டிருந்தனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள்  ற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும்   தவிசாளர் தெரிவில் கலந்துகொள்ளவில்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews