இதுவரை 52225 மரங்களை நாட்டியுள்ள மனித உரிமைகள் சமாதான தூதுவர் மற்றும் அப்துல் கலாம் அறக்கட்டளை அமைப்பு…..!

வடக்கு மாகாணத்தில் இரண்டு வருடத்தில்  52225. மரங்களை நாட்டியுள்ளதாகவும் அடுத்த வருடம் தாம் ஒரு இலட்டம் மரங்களை நாட்டவுள்ளதாகவும்,  மனித உரிமைகள் சமாதான தூதுவர் அமைப்பின் வடமாகாண பணிப்பாளரும்,  பசுமை சுற்றுச்சூழல் விவசாய முன்னணியின் இலங்கைக்கைக்கான பணிப்பாளரும், உலகளாவிய ஐக்கிய அப்பதுல் கலாம் அறக்கட்டளை இலங்கை பிரதிநிதியுமான சிறிமான் எம் எஸ் கணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் பலாலி வீதியிலுள்ள கோண்டாவில் தனியார் விடுதியில் இடம் பெற்ற யாழ் மாவட்ட நிர்வாகிகளுடனான வருட இறுதி கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் மனித உரிமை தூதுவர் அமைப்பின நிவாக பணிப்பாளரும், உலகளாவிய  அப்துல்கலாம் அறக்கட்டளை அமைப்பின் உப தலைவருமான செ.திருமாறன்,
இயற்கை சுற்றுச்சூழல் அமைபஸபின் பிரதிப்பணிப்பாளரும் உலகளாவிய அப்துல் காலம் அற்க்கட்டளை நிறுவனம் பொருளாளருமான கா.பி.ஜெயவிந்தன், மனித உரிமைகள் தூதுவர் அமைப்பின் பிரதி பணிப்பாளர் திருமதி மோகனா தேவகரன், அப்துல் கலாம் அறக்கட்டளை கிளிநொச்சி பணிப்பாளர் செல்வி சதுர்சிகா தேவகரன், மனுத உரிமைகள் தூதுவர் அமைப்பின் யாழ் மாவட்ட பணிப்பாளர்   உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews