மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதை வேடிக்கை பார்க்கமாட்டேன்! கைதான இழுவை படகுகள் தமிழகம் திரும்பாது.. |டக்ளஸ் தேவானந்தா.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த மீனவ சமுதாயம் எதை விரும்புகிறதோ அதை செய்யத் தயார் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் முன் வாக்குறுதி வழங்கினார்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட மீனவ சங்கங்கள் இணைந்து நடத்திய வீதி மறியல் போராட்டத்தில் மக்கள் முன் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா சட்டவிரோத இழுவை படகினால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. அண்மையில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் ஒரே நாளில் பலர் கைது செய்யப்பட்டார்கள்

அவர்களிடமிருந்து ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டது. இந்தியா எமது தொப்புள் கொடி உறவு எனக் கூறிக்கொண்டு எமது மீனவர்களின் வயிற்றில் அடிப்பது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் ஆகிவிடும்.

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் வடபகுதி மீனவர்கள் விடயம் பற்றி பேசி உள்ளேன் அவர்கள் நான் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள்.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய பிரச்சினை தொடர்பில் இந்திய உயர் மட்டங்களுடன் பல தடவை பேசினேன் உறுதியான முடிவுகளை எட்ட முடியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள்

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைவதால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதோடு அவர்களின் தொழிலும் பாதிக்கப்படுகிறது. இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் வ

டபகுதி மீனவர்களின் பல லட்சம் ரூபா பெறுமதியான தொழில் உபகரணங்களை தொடர்ச்சியாக அழித்து வருகிறார்கள். போராட்டம் நடத்திய மீனவ மக்கள் என்னிடம் கோரிக்கை முன் வைத்துள்ளார்கள்.

அத்துமீறி நுழைந்த இந்திய ரோலர் படகுகளை அரசுடைமையாக்கி தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும்

அவர்களின் படகுகளை அரசுடமையாக்கி பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க எண்ணியுள்ளேன். குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி

மக்களின் நியாயமான கோரிக்கையை நான் நிறைவேற்றுவேன். ஆகவே இந்திய அரசாங்கத்துடன் பேசுவதற்கு நான் தயாராக இருக்கின்ற நிலையில் தொடர்ந்தும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டினால் கைதும்

பேச்சுக்கு அழைத்தால் பேச்சுவார்த்தையும் இடம்பெறும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews