பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் பொலித்தீனிற்கு தடை.!

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றய தினம்(29) சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் அக வணக்கத்துடன் ஆரம்பமானது.
இதில் முக்கிய தீர்மானங்களாக பருத்துறை பிரதேச சபையால் 9 ம் மாதத்தினை பன விதை நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு 10000/- பனை விதைகள் நாட்டுவதென்றும்,  சபை எல்லைக்குள் மூன்று மாதத்திற்குள் பொலித்தீன் பாவனையை முற்றாக கட்டுப்படுத்துவதென்றும், சபை வீதிகளுக்கு  ஊரிக்களி மண்  பயன்படுத்தி அமைப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டதுடன் நிதிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் கணக்குகள் சம்மந்தமாக சபையில் உரையாடபட்டது.  பருத்துறை நகர சபையின் உக்காகத கழிவு பொருட்களை பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட இடத்தில் கொட்டுவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் மூன்று மாத காலங்களுக்கு சுழற்சி முறையில் அனுமதி கொடுப்பதாகவும் ஒரு உழவு இயந்திர  பெட்டி குப்பைக்கு ரூபா 5000  அறவிடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. இன்றைய  சபை அமர்வில் 20 உறுப்பினர்களில் 18உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews