கனடா பொது தேர்தல்! வாக்கு பதிவின் தற்போதைய நிலவரம் –

கனடாவில் பொது தேர்தல் இடம்பெறுகின்ற நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறைவான ஊழியர்கள் மற்றும் குறைவான வாக்களிப்பு மையங்கள் இயங்குவதாலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்க நேரிட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் அலுவலகம் கூறியுள்ளது.

கனடாவில் பொதுத் தேர்தல் 44வது பொது தேர்தல் இன்று இடம்பெறுகின்றது. இரண்டு முறை பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இம்முறை பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புகளில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் ஜஸிடின் ட்ரூடோவும் கன்சவேர்ட்டிவ் கட்சி சார்பில் எரின் ஓ டூல்லும் களமிறங்குகின்றனர். சர்வதேச அளவில் பிரபலமான தலைவர்களில் ஒருவராக அறியப்படும் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

கனடாவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் இடம்பெறும். எனினும் 2019ம் அங்கு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியால் அறுதிப் பெரும்பான்மைய பெற முடியாமல் போனது.

இதனால் இரண்டு ஆண்டுகளிலேயே மற்றுமொரு தேர்தலை கனடா சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வாக்குபதிவுகள் மிகவும் மொதுவாக இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ட்ரூடோ கியூபெக்கின் மாண்ட்ரீலில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார், அதே நேரத்தில் அவரது போட்டியாளரான எரின் ஓ டூல் ஒன்ராறியோவில் உள்ள போமன்வில்லி நகரில் வாக்களித்தார்.

குறைவான ஊழியர்கள் மற்றும் குறைவான வாக்களிப்பு மையங்கள் இயங்குவதாலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்க நேரிட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் அலுவலகம் கூறியுள்ளது. சில இடங்களில் வரிசை நகருவதாக தெரிவியவில்லை வாக்காளர்கள் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews