அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டால் மக்களே பாதிப்பு- ஜே.சி.அலவத்துவல எம்.பி…!

அரசாங்கம் தன்னிச்சையான முறையில் செயற்படுகின்றமையின் விளைவாகவே கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் சவாலை அப்பாவி நாட்டு மக்களே எதிர்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று(1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எமது நாட்டில்; கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் வீதம் அதிகரித்த மட்டத்தில் உள்ளது.

இது கவலைக்குரிய விடயமாகும். இது சிறந்த விடயமல்ல. ஏனெனில் உலக நாடுகளில் எமது நாடு முதலிடத்திற்கு வந்துள்ளது. தெற்காசியாவின் ஏனைய நாடுகளான இந்தியா, பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகளின் மரண வீதம் பூச்சியமாகும்போது எமது நாட்டில் இறப்பு வீதம் 8 ஆக உயர்வடைந்துள்ளது.

தெற்காசியாவில் எங்கும் இல்லாத வகையில் சிறந்த சுகாதார கட்டமைப்பே எமது நாட்டில் காணப்பட்டது. 2018ஆம் ஆண்டில் உலக சுகாதாரஸ்தாபனம்கூட எமது நாட்டின் சுகாதார துறையை பாராட்டியது. அத்தகைய சுகாதார சேவையையே இந்நிலைக்கு கொண்டுவந்துள்ளனர். அரசாங்கத்தின் செயற்பாடுகளின் காரணமாக சுகாதார துறையினால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட அனைத்து வைத்தியர்களின் கருத்தின் ஊடாகவும் அரசாங்கம் தன்னிச்சையான முறையில் செயற்படுகின்றமையே புலப்படுகின்றது.

அதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் பாரிய அச்சுறுத்தல் நிலையை ஏற்படுத்தியள்ளது. .இதன் விளைவை அப்பாவி மக்களே எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. இதன் காரணமாக 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews