யு.எஸ்.எயிட் தலைமை நிர்வாகி சமந்தா பவர், இலங்கை நிலவரம் தொடர்பில் பேச்சு!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, யு.எஸ்.எயிட் தலைமை நிர்வாகி சமந்தா பவர், இலங்கை நிலவரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சமந்தா பவர், கடந்த 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடி, காலநிலை மாற்றம் போன்ற சர்வதேச விவகாரங்கள், இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமானதாக இடம்பெற்றுள்ளன.
நேற்று, சமந்தா பவர், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், கருத்து சுதந்திரம், சிறுபான்மை குழுக்களின் உரிமைகளை பாதுகாப்பது உட்பட, பல விடயங்கள் தொடர்பில், பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை முன்னேற்றுவதற்காக, சிவில் சமூகத்துடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவது தொடர்பிலும், அமெரிக்காவின் அர்ப்பணிப்பை, யு.எஸ்.எயிட் தலைமை நிர்வாகி சமந்தா பவர் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் வெளிவிவகார செயலாளரையும், சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

இதன் போது, இந்தியாவும் அமெரிக்காவும், மூலோபாய சகாக்கள் மற்றும் பல அபிவிருத்தி விவகாரங்களில் ஒத்துழைப்பாளர்கள் என்பதை, மீள உறுதி செய்வதே, இந்த சந்திப்பின் நோக்கம் என, யு.எஸ்.எயிட் பதில் பேச்சாளர் செஜால் புலிவர்ட்டிரி குறிப்பிட்டார்.
பிராந்தியம் தொடர்பிலும், இந்தியாவின் தலைமைத்துவம் தொடர்பிலும், இலங்கை, பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள தருணத்தில், அமெரிக்காவின் உதவி தொடர்பிலும் ஆராயப்பட்டதாக, யு.எஸ்.எயிட் பதில் பேச்சாளர் செஜால் புலிவர்ட்டிரி குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews