தந்தை இயக்கிய புல் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி 03வயது குழந்தை உயிரிழப்பு.

புல் வெட்டிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
பள்ளம, சேருகெலே பிரதேசத்தில் தனது தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த குழந்தை குறித்த ட்ரக்டர் இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனர்த்தம் தொடர்பில் இயந்திரத்தை செலுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews