கரையோர பாதுகாப்பு, கண்டல் தாவரங்களின் பங்கு, கரையோர வளங்களை பாதுகாத்தல், விழிப்புணர்வு கருத்தமர்வு.

கரையோர பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் அவற்றில் கண்டல் தாவரங்களின் பங்கு, கரையோர வளங்கள் அழிக்கப்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி விழிப்புணர்வு கருத்தமர்வு நேற்று 20/09/2022 (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி பூனகரி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. கரையோர பாதுகாப்பு... Read more »

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தை

இலங்கை அதிகாரிகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை செப்டம்பர் 16ம் திகதி நடைபெற்றதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதன்போது, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடுகளுக்கு நீண்ட கால முதலீடுகள் மூலம் ஆதரவளிக்கத்... Read more »

குழந்தைகள் உட்பட 12 இலங்கை தமிழர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்பு

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக சென்ற 12 பேரை  இந்திய கடலோர காவல் படையினரால் மீட்டுள்ளனர். தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை இன்று செவ்வாய்க்கிழமை(20) காலை பத்திரமாக மீட்ட... Read more »

உக்ரைனில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் – உத்தியோகபூர்வ அறிக்கை வெளியாகவில்லை

உக்ரேனின் கர்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த இலங்கையர்களை மீட்பது தொடர்பில் உக்ரைன் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கையை வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதரகம், துருக்கியேவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் துருக்கியேவில் உள்ள உக்ரைன் தூதரகம் ஆகியவற்றின்... Read more »

மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு..! நீளும் வரிசைகள்

முத்துராஜவெல முனையத்தில் எரிபொருள் கையிருப்பு இல்லை என்பதால் முத்துராஜவெல முனையம் மூடப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் மக்கள்... Read more »

மூதூர் கிழக்கில் கட்டுக்கடங்காத  உழவுக் கூலி, விவசாயிகள் அவதி. கட்டுப்படுத்த தவறும்  கமநல சேவை நிலையம்….! 

இம்முறை  பெரும்போகச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உழவு வேலைகளை ஆரம்பிப்பதில் பாரிய பிரச்சனைகளை எதிர் நோக்கியுள்ளனர். தேவையான எரிபொருளை கமநல சேவைகள் திணைக்களத்தின் சிபாரிசுடன் விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் உழவு இயந்திர உரிமையாளர்கள் ஏக்கருக்கு  மூன்று உழவுக்கான கூலியாக இருபதாயிரம்... Read more »

மூன்றுவேளை உணவு வழங்க மதுபான விலையை குறைக்க கோரிக்கை

இந்த நாட்டில் போசாக்கின்மையை குறைத்து மூன்று வேளை உணவு வழங்க வேண்டுமாயின் மதுபானசாலைகளை மூட வேண்டும் அல்லது மதுபானத்தின் விலையை குறைக்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பகல் முழுவதும் உழைக்கும் மக்கள் மாலையில் சிறிதளவு மதுபானம் அருந்துவது வழக்கமாகிவிட்டதாக... Read more »

நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் நச்சுத்தன்மை – இலங்கையர்களுக்கு பேரிடியான தகவல்

நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சிசுக்கள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் விஷம் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். திரிபோஷவில் அடங்கியிருக்க வேண்டிய அளவை விட அபலரொக்சின் அளவு அதிகமாக இருப்பதன்... Read more »

உணவை கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை

இலங்கையில் நிலவும் உணவுப்பாதுகாப்பின்மை காரணமாக சில குடும்பங்கள் உணவை கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது. இலங்கையில் உணவுப்பாதுகாப்பு நிலைமை ஸ்திரமற்றதாகவே இருப்பதாக, ஐக்கிய நாடுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் வீட்டு உணவுப்பாதுகாப்பு ஆய்வுகளின்படி,... Read more »

வாள் வெட்டில் உயிரிழந்த நபரின் பணத்தை திருடிய சந்தேகநபர் உட்பட மூவர் விளக்கமறியலில்

திருகோணமலை-பேதிஸ்புர பகுதியில் கடந்த 16ஆம் திகதி வால் வெட்டில் உயிரிழந்த நபரின் பணம், அடையாள அட்டை மற்றும் ஏ.டி.எம் கார்ட் போன்றவற்றுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ்... Read more »