இலங்கைக்கு உதவக் காத்திருக்கும் பிரித்தானிய அரசு! ரணிலுக்கு வந்த தகவல்

இலங்கை நெருகடியில் இருந்து மீள்வதற்கு பிரித்தானியா உதவிகளை வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான பிரித்தானியாவின் திட்டம் குறித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவலொன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவின் குறித்த திட்டத்தின் காரணமாக இலங்கைக்கு பெரும் நன்மைகள்... Read more »

உலகளவில் உணவுப்பொருட்களின் விலைகள் தொடர் வீழ்ச்சி!

உலகளாவியரீதியில் உணவுப்பொருட்களின் விலைகள் ஐந்தாவது மாதமாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து உலகளாவியரீதியில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தன. இந்த நிலையில் தற்போது... Read more »

விமான எரிபொருளுக்கு தட்டுப்பாடு! அமைச்சு வெளியிட்ட தகவல்

இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தேவையான விமான எரிபொருள் போதுமான அளவில் கையிருப்பில் இல்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் விமான எரிபொருள் 10 முதல் 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்டுநாயக்க... Read more »

மீண்டும் களமிறங்கிய மகிந்த – தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

சமகாலத்தில் தென்னிலங்கை அரசியலில் நிலையான தலைமைத்துவம் இன்மையால் சிறிய கட்சிகள் சிதறுண்ட நிலையில் காணப்படுகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து போட்டியிட்ட பல சிறிய கட்சிகள் தற்போது பிரிந்து சென்று சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுஜன... Read more »

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்ற இளம் தாய்!

புத்தளம் வைத்தியசாலையின் முதல் முறையாக கர்ப்பிணி தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். 24 வயதான இளம் தாய் இந்த குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சுமித் அன்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், ஒரு ஆண் குழந்தை மற்றும் மூன்று... Read more »

மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

ஓட்டமாவடியில் மின்சாரம் தாக்கி தாயொருவர் மரணித்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை காவல் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த மரணச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டுப்பெண் குளிர்சாதனப்பெட்டிலிருந்த பொருட்களை எடுக்க திறந்த போது குளிர்சாதனப்பெட்டியில் மின்னொழுக்கு... Read more »

ஜெனிவா விவகாரம் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு

“அனைத்து நாடுகளையும் அரவணைத்துப் பயணிக்கவே விரும்புகின்றோம் எனவும் ஜெனிவா விவகாரத்தில் இதுவே எமது நிலைப்பாடு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டன் தலைமையில் புதிய... Read more »

நாடாளுமன்றில் ஆரம்பமான காரசார விவாதத்தின் மத்தியில் வெளியான முக்கிய அறிவிப்பு!

சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாவது நாள் விவாதம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், இன்றைய 3ஆம் நாள் விவாதத்தைத் தொடர்ந்து, இன்று மாலை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 30ஆம்... Read more »

தந்தையை இரும்பால் தாக்கி கொலை செய்த மகன்

கொழும்பு இரத்மலானை பிரதேசத்தில் மகன் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொலை செய்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான மகனுக்கும் தாய் மற்றும் தந்தையுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மகன் தந்தையை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். சம்பவத்தில் 70 வயதான தந்தை சம்பவ இடத்திலேயே... Read more »

2 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள்... Read more »