நுணாவின் ஐஓசி யில் நாளை கிராம அலுவலர்களுக்கு பெற்றோல் விநியோகம்!

சாவகச்சேரி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாளைய தினம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்டத்திலுள்ள கிராம அலுவலர்களுக்கு க்யூ ஆர் கோட் அடிப்படையில் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது. நாளை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை கிராம அலுவலர்கள்... Read more »

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் அதிகரிப்பு!

ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ பரிசோதனை கட்டணம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தேசிய... Read more »

நாட்டில் தொடரும் கொலைச் சம்பவங்கள், கம்பஹாவில் ஒருவர் பலி!

கம்பஹா – கெஹல்பத்தர பிரதேசத்தில் இன்று காலை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார் என கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் 12ஆம் திகதி மாபெரும் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 12ம் திகதி 2000ம் நாட்களை எட்டவுள்ளது. அன்றைய தினம் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக கிளிநொச்சி வலிந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், தமிழ் மக்கள் என... Read more »

வவுனியாவில் கியூஆர் முறைமை வெற்றி : எரிபொருளுக்கான வரிசைகள் குறைந்தது!

வவுனியாவில் கியூஆர் முறைமை மூலமான எரிபொருள் விநியோகம் வெற்றியடைந்துள்ளதுடன், இதனால் வரிசைகள் குறைந்து செல்லும் நிலைமையை அவதானிக்க முடிந்துள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவருகின்ற நிலையில்,  அரசினால் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து குறித்த முறைமை நாடாளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும்... Read more »

திங்கட்கிழமை முதல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படும்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, தற்போது நான்காயிரத்து தொள்ளாயிரத்து பத்து ரூபாயிற்கு விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 200 ரூபாயிற்கு மேல் குறைக்கப்படவுள்ளது. எரிவாயு பற்றாக்குறையை... Read more »

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்த அறிவிப்பு!

வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அனர்த்தங்கள் நிகழுமாயின் அதுபற்றி துரித தொலை பேசி இலக்கத்தின் ஊடாக நிலையத்திற்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. துரித தொலைபேசி... Read more »

தொடர்ந்தும் சிங்கப்பூரில் தங்கியிருக்க அனுமதி கோரும் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூரில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு அனுமதி கோரியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போராட்டக்காரர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் 14 ஆம் திகதி மாலைதீவு ஊடாக அவர் சிங்கப்பூருக்குப் பயணமாகியிருந்தார். இதன்போது அவருக்கு 14 நாட்களுக்கு வீசா... Read more »

கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல்வாதிகள் கூட எமது போராட்டம் தொடர்பில் பேசி வலுச்சேர்க்கவில்லை – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை.

கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில்  அரசியல்வாதிகள் கூட  எமது போராட்டம் தொடர்பில் பேசி வலுச்சேர்க்கவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின்போது, மாவட்ட சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி... Read more »

மூளாய் மனித வள முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி….!

மூளாய் மனித வள அபிவிருத்தி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மனித வள முன்பள்ளி மாணவர்களின் 2022 ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி 03.07.2022 புதன் கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரான முருகவேல்... Read more »